தமிழகம் முழுவதும் ” மதி சந்தை” , “மதி திணை உணவகங்கள்”!! முதல்வர் அதிரடி!!

 
மதி சந்தை

தமிழகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் வகையில்  கலெக்டர் அலுவலகங்களில் மகளிர் சுய உதவி குழுக்களால் நடத்தப்படும் மதி திணை உணவகம்  உட்பட  பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். நேற்று ஆகஸ்ட் 16ம் தேதி மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் 3வது கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது.   இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாடு குறித்து  ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு திட்டங்களை  அறிவித்துள்ளார்.  

ஸ்டாலின்

சுயஉதவிகுழுக்களின் தயாரிப்புகளை விற்க, ‘மதி சந்தை’  ஆன்லைன் மூலம்  விற்பனை தளம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   குழுக்களின் உற்பத்தி பொருட்களை  பெரும் வணிக நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யவும், மாநில, மாவட்ட அளவில் வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள்   சந்திப்பு நடத்தப்படும். இதுதவிர, உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் முக்கிய சுற்றுலா தலங்களில் ‘மதி அங்காடிகள்’ நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

மதி திணை உணவகம்

அதே போல்  பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக ‘மதி எக்ஸ்பிரஸ் வாகனங்கள்’ வழங்கப்பட உள்ளன. சுயஉதவி குழுக்களால் இயக்கப்படும் ‘மதி திணை உணவகங்கள்’,  கலெக்டர்   அலுவலகங்களில் அமைக்கப்பட உள்ளன.  முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கப்பட்டு, மகளிர் மேம்பாட்டு நிறுவன சுயஉதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்பு மூலம், தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.    

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web