அனல் பறக்கும் பிரச்சாரம்... மதுராவில் நடிகை ஹேமமாலினி - குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் நேருக்கு நேர் போட்டி!
உத்தரபிரதேசத்தின் தெய்வீக நகரமாக கருதப்படும் மதுராவில், மக்களவைத் தேர்தல் போட்டியில் பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அங்கு காங்கிரஸ் சார்பில் சர்வதேச குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் போட்டியிடுகிறார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி 2014 மக்களவைத் தேர்தலில் மதுராவிலிருந்து முதல் பெண் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் நடிகை ஹேமமாலினி மதுரா மக்களால் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உ.பி.யின் ராஷ்ட்ரிய லோக் தளம் இந்த இரண்டு தேர்தல்களிலும் ஹேமமாலினியை கடுமையாக எதிர்த்தது. ஆனால் இம்முறை அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் உறுப்பினராகியுள்ளது. இந்த காரணத்திற்காக, ஹேமமாலினி அதிக ஆதரவைப் பெற்ற பாஜக வேட்பாளராக அறியப்படுகிறார்.
ஆனால், அங்கு குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங் பெயரை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதன் காரணமாக மதுராவில் பாஜகவின் ஹேமமாலினிக்கும், காங்கிரஸின் விஜயேந்தருக்கும் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை வென்றவரும், இந்தியாவின் ஒலிம்பிக் வீரருமான விஜயேந்தர் ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்தவர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவர் ஹரியானாவை ஒட்டியுள்ள தலைநகர் தெற்கு டெல்லி தொகுதியில் மக்களவைக்கு போட்டியிட்டார். மதுராவில் விஜயேந்தர் சார்ந்த ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் குறிப்பிடத்தக்கவை. இதனால் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜயேந்தர் போட்டியிடுகிறார்.
இங்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும். உ.பி.யில் அகில இந்திய எதிர்க்கட்சியான சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!