“ஜனநாயகமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்” - இந்திய அரசியலமைப்பு நாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான இன்று, இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டுத் தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தலைவர்களை நினைவுகூர்ந்து போற்றியுள்ள அவர், நாட்டில் ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்நாள் இந்திய அரசியலமைப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் உயரிய விழுமியங்களை எப்போதும் நிலைநிறுத்தி, வளம் மிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம் என முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் விதமாக, “ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்” என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
