இன்று தொடங்குகிறது MBBS, BDS மருத்துவக் கலந்தாய்வு... செக் லிஸ்ட் இதுதான்!
Aug 13, 2026, 07:05 IST
தமிழ்நாட்டில் 2026-27-ஆம் கல்விய ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக் கலந்தாய்வு இன்று ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இன்று ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கும் கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வரை நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் 7.5% முன்னுரிமை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கலந்தாய்வு நடத்தப்படும்.
தற்காலிக ஒதுக்கீடு : ஆகஸ்ட் 20. இறுதி ஒதுக்கீடு: ஆகஸ்ட் 21 மருத்துவப் படிப்புகளில் சேரக் காத்திருக்கும் மாணவர்களுக்கு இக்கலந்தாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
