MBBS, BDS மருத்துவப் படிப்புகள் தரவரிசைப் பட்டியல் வெளியானது... விழுப்புரம் மாணவர் 705 மதிப்பெண்களுடன் முதலிடம்!

 
அருண்ராஜ்

தமிழகத்தில் MBBS மற்றும் BDS மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலைச் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் 9,999 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள்ஒதுக்கீட்டின் கீழ் 537 MBBS இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசு ஒதுக்கீட்டிற்குப் பெறப்பட்ட 41,726 விண்ணப்பங்களில் 35,926 ஏற்றுக்கூள்ளப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டில் 26,956 விண்ணப்பங்களும், 7.5% உள்ஒதுக்கீட்டில் 3,625 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: இளம் மருத்துவர்களின் எதிர்காலத்தை பொருந்தா நிபந்தனைகள் பாதிக்க கூடாது! – டாக்டர் ராமதாஸ் 

பொதுப் பிரிவு தரவரிசையில் வெங்கடபதி வேலாயுதம் (விழுப்புரம்) – 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்திலும், ஸ்ரீநிகா (புதுக்கோட்டை)  - 700 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்திலும், சுடர் (விருதுநகர்) – 696 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளனர். நான்காமிடம்: வனிஷா சதீஷ் (சென்னை) – 695 மதிப்பெண்கள், ஐந்தாமிடம்: சபரி (ஈரோடு) – 695 மதிப்பெண்கள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலும் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.