இன்று முதல் M.Ed மாணவர் சேர்க்கை தொடங்கியது - ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
Aug 11, 2026, 09:10 IST
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான எம்.எட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். தரவரிசைப் பட்டியலின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 27 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான முதலாண்டு வகுப்புகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
