கல்லூரி விடுதி அறையில் மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 
சகாயரோஜஸ் நிவின்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே கல்லூரி விடுதியில் தங்கியிருந்த பல் மருத்துவ மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயரோஜஸ் நிவின் (23). திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு விடுதிக்கு திரும்பிய சகாயரோஜஸ் நிவின், விடுதியில் தங்கியுள்ள சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு மாலை மீண்டும் விடுதிக்கு திரும்பி உள்ளார். 

தற்கொலை

அதன் பின்னர் இரவு அனைவரும் உணவருத்தி விட்டு தூங்க சென்ற நிலையில் சகாயரோஜஸ் நிவின் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனைகண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக மயங்கிய நிலையில் இருந்த நிவினை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கழுக்குன்றம் போலீசார், பல் மருத்துவ மாணவன் சகாயரோஜஸ் நிவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சகாயரோஜஸ் நிவின் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!