மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல்.. பேருந்தை மடக்கி பிடித்து மாணவர்களுக்கு தர்ம அடி கொடுத்த உறவினர்கள்..!!

 
மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல்

விழுப்புரம் அருகே ஆம்னி பேருந்தில் முதுகலை பெண் மருத்துவ மாணவிக்கு ஆம்னி பேருந்தில் பாலியல் சீண்டல் அளித்த 11 பேரை பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  

சென்னையில் இருந்து  இரவு திருநெல்வேலிக்கு தனியார் ஆம்னி  பேருந்தில் முதுகலை மருத்துவம் பயிலும் பெண் ஒருவர் பயணம் செய்து வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது நள்ளிரவு  ஒரு மணி அளவில் பேருந்து  திண்டிவனம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது திருநெல்வேலியைச் சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல் மதுபோதையில்  பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.  அப்போது உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை 11 பேர் கொண்ட கும்பலில் இருவர் மட்டும் பெண் மீது தவறான கண்ணோட்டத்தில் பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பெண் அவர்கள் இருவரையும் எச்சரித்த நிலையிலும் மீண்டும் மீண்டும் பாலியல் சீண்டல் செய்ததால் விழுப்புரத்தில் உள்ள அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் விழுப்புரம் புறவழிச்சாலையில் நின்று கொண்டு பேருந்தை நிறுத்தியபோது ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்றார். இதனால், ஆத்திரமடைந்த உறவினர் இருசக்கர வாகனத்தில் 8 கிலோமீட்டர்  வேகமாக சென்று பிடாகத்தில் ஆம்னி பேருந்தை சினிமா பட பாணியில் மடக்கி பிடித்தனர்.

பின்னர் பேருந்தில் இருந்த 11 நபர்களை கீழே இறக்கி தர்ம அடி கொடுத்து அந்த பேருந்து மற்றும் அதிலிருந்து அனைவரையும் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அனைவரையும் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முகமதுயாசர், தங்கமாரியப்பன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இருவர்களும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

From around the web