அடி தூள்!! புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடித்த தமிழக பேராசிரியர்கள்!!

 
புற்றுநோய்க்கு மருந்து

எங்கெங்கோ கேள்விப்பட்டு இப்போதெல்லாம் பக்கத்து வீடு எதிர்வீடு, வீதிக்கு ஒருவருக்கு புற்றுநோய் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, காலசூழ்நிலை என்ன காரணம் கூறினாலும் புற்றுநோய் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு தான் . இதற்கு மருந்தே கிடையாது என்ற அச்சத்திலேயே பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விடுகின்றனர். உயிரை உருக்கும் நோயாக இருக்கும் புற்றுநோய்க்கு லேசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் மீண்டும் ஒரு முறை வந்து விட்டால் என்ன செய்வது என்ற மன உறுதியையும் சேர்த்து அழித்து விடுகிறது லேசரின் கொடுமையான ட்ரீட்மெண்ட்.

பாரதியார் பல்கலைக்கழகம்

இந்நிலையில் புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை  கண்டறிந்துள்ளனர்  கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வாங்கியுள்ளனர்.  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி பணிபுரிந்து  வருகிறார். இவருடன்   தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் இணைந்து இதனை கண்டுபிடித்துள்ளனர்.  ள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது. இது குறித்து   பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமைக்கு  2020ல்   விண்ணப்பிக்கப்பட்ட நிலையில்,   ஜூலை  31ம் தேதி, மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.  

புற்றுநோய்க்கு மருந்து


இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ”  தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமின்றி அனைத்து  செல்களையும்  அழித்து விடுகின்றன”  ஆனால்  செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள், புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது. இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த நானோ துகள்களை எலிக்கு செலுத்தியதில்  வெற்றி கிடைத்துள்ளது.  விரைவில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவோம். அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.” என தெரிவித்துள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web