மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்.... திரையுலகில் அடுத்தடுத்து சோகம்!

 
மீரா ஜாஸ்மின்

 தமிழ் திரையுலகில் ரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.  2002ல் வெளியான இப்படத்தில் மீராவின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு  நடிகை மீரா ஜாஸ்மினக், பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, சண்டக்கோழி, நேபாளி, இங்க என்ன சொல்லுது உட்பட   பல படங்களில் நடித்துள்ளார்.

மீரா ஜாஸ்மின்
இந்நிலையில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை ஜோசப் பிலிப்  வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 83, இவர் எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  ஜோசப்க்கு மனைவி ஏலியம்மா ஜோசப் மற்றும் மீரா ஜாஸ்மின் தவிர மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு திரையுலக நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் , பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல் பதிவினை வெளியிட்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web