மீரட்டில் அதிர்ச்சி! கணவரின் அந்தரங்க உறுப்பை கத்தியால் தாக்கிய மனைவி !
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில், கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீரட் மாவட்டத்தின் ஜத் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நதீம். இவரது மனைவி ஷப்னம். கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு நதீமுக்கு மயக்க மருந்து கலந்த பாலை ஷப்னம் கொடுத்ததாகவும், அதை குடித்த அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பைப் பலமாகத் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நதீம் அலறியதாகவும், சத்தம் கேட்டு வந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷப்னமைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் தாக்குதல் தொடர்பான முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
