கணவரை கொன்றுவிட்டு கொள்ளை நாடகம்! திருடனை வைத்து மனைவி செய்த செயல் - போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

 
உபி

 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கணவர் மரணம் தொடர்பாக மனைவி மற்றும் அவரது காதலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், உடலில் இருந்த காயங்கள் மற்றும் பின்னர் கிடைத்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.மீரட்டின் லோஹியா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாகீர் காலனியைச் சேர்ந்தவர் முகமது தாலிப் (30). கட்டிட தொழிலாளியான இவருக்கு இல்மா (27) என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தாலிப் உயிரிழந்தார்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

தாலிப் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை நம்பிய உறவினர்கள், செப்டம்பர் 29-ம் தேதி அவரது உடலை முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.இதற்கிடையே, தாலிப்பின் உடலை அடக்கம் செய்யும் போது அவரது கழுத்துப் பகுதியில் காயத்தின் தடயங்கள் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

மேலும், தாலிப்பின் செல்போன் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இல்மாவுக்கும் அமன் என்பவருக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தகவல்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.உறவினர்கள் நடத்திய விசாரணையில், தாலிப்பை இல்மாவும், அமனும் சேர்ந்து கொலை செய்ததாக இல்மா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோவிலும் இதுதொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த வீடியோ தனித்துவமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதயம் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆம்புலன்ஸ்

போலீசாரின் விசாரணையின்படி, செப்டம்பர் 28-ம் தேதி தாலிப்புக்கும் இல்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதன்பின்னர் அமனை இல்மா வீட்டுக்கு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் தாலிப்பின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாக இல்மா தெரிவித்ததாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.இதையடுத்து இல்மா மற்றும் அமன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளதால், அதை தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே தாலிப்பின் மரணத்திற்கான உண்மையான காரணம் குறித்து தெளிவாக தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.