'மெகா ஆஃபர்'... திருமாவளவனுக்குத் துணை முதல்வர் பதவி? விஜய்யின் மாஸ்டர் பிளான்.. இடைத்தேர்தலில் திருமா போட்டி?!

 
விஜய் திருமா விஜய் திருமா

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுநர் அளித்த மே 10 கெடுவிற்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிரடி வியூகங்களை வகுத்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் (CPI) ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிக-வை இழுக்க விஜய் தரப்பில் இருந்து மிகப்பெரிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, தவெக - விசிக கூட்டணி உறுதியானால் கீழ்க்கண்ட சலுகைகள் திருமாவளவனுக்கு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. தவெக ஆட்சி அமைக்கும் பட்சத்தில், சமூக நீதி மற்றும் அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் விசிக தலைவர் திருமாவளவனுக்குத் 'துணை முதலமைச்சர்' பதவி வழங்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

திருமா விஜய்

இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ள சூழலில், திருமாவளவன் சட்டமன்ற உறுப்பினராகும் பொருட்டு அவருக்குத் 'திருச்சி கிழக்கு' தொகுதியை ஒதுக்கத் தவெக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது விஜய்யின் பலம் 114-ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. விசிக-விடம் 4 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்சியின் ஆதரவு கிடைத்தால் விஜய் நேரடியாக ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெறுவார். இதனால் தான் விசிக-வை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்கத் தவெக இவ்வளவு பெரிய பதவிகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்

திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது அதிகாரப் பகிர்வை முன்னிறுத்தி தவெக-விற்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலை அல்லது நாளை காலை விசிக தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த 'மாஸ்டர் பிளான்' வெற்றி பெற்றால், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிகார மையம் உருவாகும் என்பது உறுதி.