“பாஜகவில் பெண்களின் பாதுகாப்பை விட பசு பாதுகாப்புக்கே முன்னுரிமை” - மெகபூபா முப்தி விமர்சனம்!
Updated: Sep 1, 2026, 07:46 IST
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பைக் காட்டிலும் பசுப் பாதுகாப்பிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பசுவதை செய்ததாகச் சந்தேகிக்கப்பட்டு கும்பல் தாக்குதல்கள் நடத்தப்படுவதைக் சுட்டிக்காட்டிய அவர், மறுபுறம் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்குத் தொடர்ந்து பரோல் வழங்கப்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள தற்போதைய சூழலில், அரசாங்கத்தின் கவனம் வேறு விஷயங்கள் மீது திரும்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
