இந்திய விமானப்படையின் தலைமைத் தளபதியாக மெஹ்தாப் சிங் தேஸ்வால் பொறுப்பேற்பு!
இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் நவம்பர் 1ஆம் தேதி பொறுப்பேற்றார். விமானப்படையில் நீண்டகால அனுபவம் கொண்ட இவர், போர் விமானங்களை இயக்குவதிலும் தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்புப் பணிகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

கடந்த 1989ஆம் ஆண்டு போர் விமானி பிரிவில் பணியில் சேர்ந்த மெஹ்தாப் சிங் தேஸ்வால், பல்வேறு வகையான போர் விமானங்களை இயக்கியுள்ளார். இதுவரை 3,200 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பறக்கும் அனுபவம் பெற்றுள்ளார்.

விமானப்படையில் ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி அவருக்கு அதி விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு பிராந்திய விமானப்படையின் முக்கியப் பொறுப்பை ஏற்றுள்ள அவரது அனுபவம், அப்பிராந்தியத்தின் வான் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுப் பணிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
