மதுரை மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு!

 
மதுரை

 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்புலன்ஸ்

சிறுவனின் உடலில் காயங்கள் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சிறுவன் உயிரிழந்ததற்கான காரணம் என்ன, அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் மற்றும் போலீஸ் விசாரணைக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரியவரும்.