பெண்களுக்கே டஃப் கொடுக்கும் ஆண்கள்.. பெண் வேடமிட்டு கோவிலில் வினோத வழிபாடு!

 
 கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி கோவிலின் புகழ்பெற்ற வருடாந்திர 'சமயவிளக்கு' திருவிழா இரண்டு நாள் மார்ச் 24, சனிக்கிழமை தொடங்கியது. பின்னர் பாரம்பரிய சடங்குகளைச் செய்தபின் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவுபெற்றது. இதில் ஆண்கள் தங்கள் மீசையை எடுத்து, பெண்களின் ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, அலங்காரம் செய்து, விளக்கு ஏற்றி ஊர்வலம் சென்று வழிபடுவர்.

இது அவர்களின் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பதற்காக தெய்வத்திற்கு அவர்கள் செய்யும் புனிதமான  வேண்டுதலின் ஒரு பகுதியாகும் என்றும் நம்பிக்கை கொள்கின்றனர்.  அவர்களின் நம்பிக்கைகளின்படி, பண்டைய காலத்தில் மாடுகளை மேய்க்கும் ஆண்கள் ஒரு குழு, பெண்களைப் போல வேடமிட்டு, ஒரு தெய்வத்திற்கு பூக்களைக் வைத்து வழிபடுவது வழக்கமாக வைத்திருந்தனர்.

கோயிலின் முதல் பூஜை இந்த ஆண்களின் குழுவால் நடத்தப்பட்டது மற்றும் இந்த சடங்கு ஆண்டு விழாவாக மாறியது. தற்போது, தெய்வத்தை வழிபட எல்லா வயதின ஆண்களும் ஒவ்வொரு ஆண்டும் பெண் வேடமிட்டு கைகளில் விளக்குகளுடன் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web