நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா...கிடாக்கறியுடன் உருண்டை சோறு!

 
உருண்டை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பாதசிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா மிகவும் பாரம்பரியமாக நடைபெறுவது வழக்கமாகும். பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்கியது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஆண் பக்தர்கள் மட்டுமே பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா: நள்ளிரவில் நடந்த கிடாக்கறி விருந்து!

பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளைச் சாமிக்கு வெட்டிப் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்துச் சுத்தமாகச் செய்தனர். பின்னர் பெரிய பெரிய அண்டாக்களில் கறியைப் போட்டுச் சமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு விருந்துக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் இந்த விசித்திரமான மற்றும் பாரம்பரியமான திருவிழாவைக் காண ஏராளமானோர் கூடினர். கிராமத்து முறைப்படி நடைபெறும் இந்த ஆன்மிக விழாவில் கலந்துகொள்வதன் மூலம் குடும்பத்திற்கு நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருவிழா நடைபெற்ற பகுதி முழுவதும் மிகுந்த உற்சாகமும் விழாக் கோலமும் காணப்பட்டது.