பள்ளிகளில் மாதவிடாய் சுகாதார மேலாண்மை.. தமிழக அரசு முக்கிய உத்தரவு!

 
மாதவிடாய் பள்ளி மாணவிகள் மாணவி

பள்ளிகளில் மாணவிகளின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் முறையான நீர் இணைப்புடன் கூடிய, மாணவிகளுக்கான தனித்தனி கழிப்பறைகள் இருப்பதைச் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

சக்ஸஸ் உற்சாகம் மாணவி மாணவிகள் பள்ளி வகுப்பறை தேர்வு

மாணவிகளிடையே பருவமடைதல், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் பிசிஓஎஸ் குறித்த விழிப்புணர்வை உரிய முறையில் ஏற்படுத்த வேண்டும்.

மாற்றுத்திறன் மாணவிகள் எளிதில் அணுகும் வகையில், சோப்பு, தண்ணீர் மற்றும் கைகழுவும் வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் பராமரிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மறுசுழற்சி செய்யத்தக்க இலவச நாப்கின்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும்.

பள்ளி மாணவி விடுமுறை உற்சாகம்

மேற்கண்ட அனைத்து அடிப்படை வசதிகளும் பள்ளிகளில் தடையின்றிச் செயல்படுவதை அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நேரில் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.