பீரியட்ஸ் டைம்ல 8 மணி நேரத்துக்கும் மேல ஒரே பேடை யூஸ் பண்றீங்களா? மருத்துவர்கள் பகீர் எச்சரிக்கை!
உலக மாதவிடாய் சுகாதார தினமான இன்று, பெண்கள் தங்களது ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய ஒரு எதார்த்தமான கசப்பான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவில் இன்றும் பல சாமானியப் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் போதிய விழிப்புணர்வு இல்லாததால், மாதவிடாய் காலங்களில் ஒரே சானிட்டரி பேடை (Sanitary Pad) சுமார் 8 முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக, ஏன் சில கிராமப்புறங்களில் 24 மணி நேரம் வரை கூடத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு நீண்ட நேரம் ஒரே பேடை மாத்தாமல் பயன்படுத்துவது, பிறப்புறுப்பில் பாக்டீரியாக்களை அசுர வேகத்தில் வளரச் செய்து, உயிருக்கே ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் தற்பொழுது அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாதவிடாய் இரத்தக் கசிவு இருக்கும் போது ஒரே பேடை நீண்ட நேரம் வைத்திருந்தால், பிறப்புறுப்பின் பிஹெச் (pH) அளவு முற்றிலும் மாறி, கடுமையான பூஞ்சை மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Fungal & Yeast Infections) ஏற்படும். இதுமட்டுமின்றி, சிறுநீர் பாதை தொற்று (UTI) எனப்படும் கொடூரமான யூரினரி இன்ஃபெக்ஷன் ஏற்பட்டுப் பெண்கள் சொல்ல முடியாத அவதிக்குள்ளாக நேரிடும். இந்த அலட்சியம் தொடரும் பட்சத்தில், அது நாளடைவில் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி (Toxic Shock Syndrome) மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) போன்ற கொடிய நோய்களாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளதாகப் மகப்பேறு மருத்துவர்கள் பகீர் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தொடர் தொற்றுகள் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளைக் கடுமையாகப் பாதித்து, எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை (Infertility) மற்றும் கர்ப்ப காலத்தில் விசித்திரமான குறைபாடுகளைக் கூட ஏற்படுத்திவிடும். எனவே, பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்க, இரத்தக் கசிவு குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்குக் குறைந்தது 2 முதல் 3 முறையாவது (ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை) கட்டாயம் பேடை மாற்றியே தீர வேண்டும். அதேபோல், பேடை மாற்றியவுடன் கைகளை சோப்பு போட்டுத் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்றும், அப்போதுதான் ஹெபடைடிஸ் பி போன்ற ஆபத்தான வைரஸ் தொற்றுகளிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் மருத்துவர்கள் சாமானியப் பெண்களுக்கு தற்பொழுது அவசர விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
