மோடியின் 'செல்ஃபி' வீடியோ சர்ச்சை... மன்னிப்பு கேட்ட மெட்டா நிறுவனம்!

 
மோடி

பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த 'செல்ஃபி' வீடியோ ஒன்றுக்குத் தவறான தகவல் எச்சரிக்கை வழங்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் பதிவிட்ட இந்த வீடியோவுக்கு, செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைக்கப்பட்ட வீடியோ எனத் தவறுதலாக எச்சரிக்கை முத்திரை பதிவிடப்பட்டது. நாட்டின் பிரதமரின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலேயே இத்தகைய தவறு நிகழ்ந்தது இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பச் சமூக வலைதளத்தில் மெட்டா நிறுவனத்தின் இந்தச் செயல் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மெட்டா நிறுவனம் உடனடியாகச் செயல்பட்டு அந்தத் தவறான எச்சரிக்கை முத்திரையைத் தனது தளத்தில் இருந்து நீக்கியது. மேலும் இத்தகைய எதிர்பாராத தொழில்நுட்பத் தவறு நேரிட்டதற்காகப் பிரதமர்  மோடியிடம் மெட்டா நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. தானியங்கி முறையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான மதிப்பீட்டினாலேயே இந்தச் பிழை நேரிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாத வண்ணம் தங்களது தொழில் நுட்ப அமைப்புகளை மேம்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Success steps (Motivation) Nehal Tumma | PM Modi's midnight selfie video is breaking records across social media! 📱🔥 From hundreds of millions of views on Instagram to massive... | Instagram

பிரதமரின் வீடியோ விவகாரத்தில் மெட்டா நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்ட செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. முக்கியத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வப் பக்கங்களைக் கையாளும் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தவறான கணிப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இதனால் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.