நாளை காலை 10 மணி முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்!

 
ஆட்சி மாறினாலும் அவஸ்தை மாறுமா? கோயம்பேடு மெட்ரோ பெயர் மாற்றம் சர்ச்சை!

 நாளை 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் இதனை ஈடு செய்யும் வகையில்  7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.   மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் நாளை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில்கள்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் 3.15 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற   உள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புறநகர் ரயில்

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூரை இணைக்கும் 4வது ரயில் பாதை 4.3 கிலோமீட்டர்கள் நீளமானது. இதை அமைக்கும் பணி ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவித்தார். இதன் பட்ஜெட் ரூ. 279 கோடி. தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி முதல், சிந்தாதிரிப்பேட்டை வரையே ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

ஆர். என். சிங்

கூவம் ஆற்றின் குறுக்கே 500 இடங்களில் அடித்தளம் அமைப்பதற்காக அஸ்திவாரப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணியும், அதன் எல்லைச் சுவர் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. சவால்கள் இருந்தபோதிலும், 4 வது ரயில் பாதையின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web