நள்ளிரவு ஒரு மணி வரை மெட்ரோ.. முன்கூட்டியே முன்பதிவு செய்துக்கோங்க!

 
மெட்ரோ
 

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியை பார்க்க ஏராளாமான ரசிகர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையடுத்து இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஐபிஎல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் ரசிகர்களின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான பயண சீட்டு முட்கூட்டியே பெறுவதற்கான வழிமுறையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் படி, சென்னை சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்படலாம். கடைசி நேர பரபரப்பை தவிர்க்க  முன்கூட்டியே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கலாம்.  

சிஎஸ்கே குஜராத் டைட்டன்ஸ்

போட்டி நிறைவடைந்த பிறகு, அரசினர் தோட்டம் /புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்டம் அலைமோதும். அதே நேரத்தில் பயணச் சீட்டு பெறவும்  நள்ளிரவில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனைத் தவிர்க்க பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக் கொள்ள  அறிவுறுத்தப்படுகின்றனர்.   இது தவிர ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50/ செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் வெளியேறலாம் எனவும் தெரிவித்துள்ளது.  இரவு 11.00 மணிக்கு மேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web