மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்!

 
மெட்ரோ ரயில்

 வங்கக்கடலில் ஃபெங்கால் புயல் நிலவி வந்த நிலையில் தற்போது  புதுவைக்கு அருகே கரையை கடந்து வருகிறது. இதனால் புதுவை, மரக்காணம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. முன்னதாக நள்ளிரவு முதல் பிற்பகல்  வரை சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர்  சூழ்ந்துள்ளது.

மெட்ரோ

55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. நாளை அதிகாலை வரை விமான நிலையம் மூடப்பட்டது.  ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் நாளை வண்டலூர் பூங்கா செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ

அதே நேரத்தில்  சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எந்த இடையூறுமின்றி இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவையினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web