செம... ஒலி அலைகளால் தீயை அணைக்கும் புது டெக்னிக்... மெக்சிகோ மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு... மாஸ் வீடியோ!

 
மெக்சிகோ

 

தீயை அணைக்க தண்ணீர் அல்லது ரசாயனப் பொருட்கள் அவசியம் என்ற நிலையை மாற்றும் வகையில், ஒலி அலைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார் மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயது மாணவி ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ்.

மெக்சிகோவின் தமவுலிபாஸ் மாகாணத்தில் உள்ள அல்தாமிரா பகுதியைச் சேர்ந்த இவர், ‘வோர்டெக்ஸ் டெக்’ (Vortex Tech) என்ற இந்தக் கருவியை தனது மாமாவும் ஆலோசகருமான ஜோஸ் ஆர்தரோ ஹெர்னாண்டஸ் உதவியுடன் உருவாக்கியுள்ளார். இதற்காக சுமார் ஓராண்டு உழைத்து ஐந்து மாதிரி கருவிகளை உருவாக்கிப் பரிசோதித்துள்ளனர்.

ஒலி அலைகள் மூலம் தீ அணைப்பு

12 வோல்ட் பேட்டரி, அதிர்வெண் ஜெனரேட்டர், ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர் உள்ளிட்ட பாகங்களைக் கொண்டு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இது 30 ஹெர்ட்ஸ் குறைந்த அதிர்வெண் ஒலி அலைகளை வெளியிடுகிறது. அவை காற்றில் சுழல் வளையங்களை உருவாக்கி, தீ எரிவதற்குத் தேவையான ஆக்சிஜன் விநியோகத்தைச் சீர்குலைத்து சிறிய தீயை அணைக்க உதவுகின்றன.

இந்தக் கண்டுபிடிப்பை இந்தோனேசியாவில் அக்டோபர் 14 முதல் 16 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புக் கண்காட்சியில் மாணவி காட்சிப்படுத்தினார். அங்கு அவருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

இருப்பினும், இந்தக் கருவி தற்போது பரிசோதனை நிலையில் உள்ள முன்மாதிரி மட்டுமே. பெரிய தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் திறன் உறுதிப்படுத்தப்படவில்லை. வழக்கமான தீயணைப்புக் கருவிகளுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.