உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்… அவுட்லுக், டீம்ஸ் பயனர்கள் தவிப்பு!

 
மைக்ரோசாப்ட்

 

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய இணையச் சேவைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், கோடிக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அவுட்லுக் மின்னஞ்சல், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கோபைலட் உள்ளிட்ட மைக்ரோசாப்ட் 365 சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Microsoft outage affects Outlook, Teams, Copilot in North America

நவம்பர் 12-ம் தேதி ஏற்பட்ட இந்தப் பாதிப்பால், பயனர்களால் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் முடியவில்லை. மேலும், வேர்ட், எக்செல், ஷேர்பாயிண்ட், ஒன் டிரைவ் உள்ளிட்ட சேவைகளிலும் இணைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிப்பு குறித்து புகார் தெரிவித்தனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விளக்கத்தின்படி, அதன் கட்டமைப்பில் உள்ள சில சர்வர்கள் எதிர்பாராத விதமாகச் செயலிழந்ததால், மற்ற சர்வர்கள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. சமீபத்திய கட்டமைப்பு மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

Microsoft outage hits Outlook, Teams and Copilot, disrupting thousands | Euronews

பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் இயக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் சேவைகள் ஓரளவு சீரடைந்தாலும், மீண்டும் சர்வர்கள் செயலிழக்கும் பிரச்சினை இருப்பதால் முழுமையான சீரமைப்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சைபர் தாக்குதல் என உறுதி செய்யும் தகவல் வெளியாகவில்லை.