தொடரும் பணிநீக்கம்... 5500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மைக்ரோசாஃப்ட்!

 
microsoft

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட், தனது செலவினங்களைக் குறைப்பதற்காகப் புதிய அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி உலக அளவில் தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 2.5 விழுக்காடு பேரைப் பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் திட்டமிட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய காரணங்களுக்காக இந்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Microsoft may lay off about 5,500 employees: Report

இந்த நிறுவனத்தில் உலக அளவில் தற்போது மொத்தம் 2.20 லட்சம் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் 2.5 விழுக்காடு ஊழியர்கள் என்றால் தோராயமாக 5,500 பேர் தங்களின் வாழ்வாதாரமான வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நிறுவனத்தின் விற்பனை, கன்சல்டிங் மற்றும் கேமிங் ஆகிய முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களே இந்தத் தொடர் பணிநீக்க நடவடிக்கையால் பெருமளவில் பாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் மே மாதத்தில் 6,000 பேரையும், ஜூலை மாதத்தில் 9,000 பணியாளர்களையும் அடுத்தடுத்துப் பணியிலிருந்து நீக்கியது. அதனை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பணிநீக்கத்தின் அளவு சற்று குறைவாகவே இருக்கும் என்று நிர்வாகத் தரப்பில் சமாதானம் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தத் திடீர் வேலைவாய்ப்பு இழப்புச் செய்தி மென்பொருள் துறை ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.