ஐரோப்பா செல்ல முயன்ற அகதிகளுக்கு நேர்ந்த சோகம்… கிரீஸ், செனகல் கடல் விபத்துகளில் 51 பேர் பலி!

 
அகதிகள்

 

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட அகதிகள் சென்ற படகுகள், செனகல் மற்றும் கிரீஸ் கடல் பகுதிகளில் அடுத்தடுத்து கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளிலும் நிகழ்ந்த விபத்துகள் அகதிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான செனகல், மாலி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக, ஏராளமானோர் ஐரோப்பாவுக்குச் செல்ல முயற்சித்து வருகின்றனர். இவர்கள் சிறிய மீன்பிடிப் படகுகள் மூலம் ஆபத்தான அட்லாண்டிக் கடல் வழியாக ஸ்பெயினின் கேனரி தீவுகளை அடைய முயல்கின்றனர்.

செனகல் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள கெபெமர் அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும், தேடுதல் பணிகள் தொடர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Canary Islands: 39 dead after migrant boat sinks off Senegal en route to Europe

கிரீஸ் அருகே மற்றொரு விபத்து

இதேபோல், கிரீஸ் நாட்டின் கிரீட் தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 18 பேர் மீட்கப்பட்டனர். லிபியாவில் இருந்து வந்த மற்ற படகுகளில் பயணம் செய்த 180-க்கும் மேற்பட்ட அகதிகளும் கிரீஸ் கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் அகதிகளின் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது