இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... இன்று முதல் பால், தயிர் விலை உயர்வு !
தமிழகத்தில் வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயலில் உருவான பாதிப்பிலிருந்து இன்னமும் மீளாத நிலையில் 4 முன்னணி பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தியுள்ளன. உயர்த்தப்பட்ட விலைப் பட்டியல் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த 4 நிறுவனங்களும் மாநிலத்தின் மொத்த பால் சந்தை பங்கில் 45 சதவிகிதத்துக்கு மேல் வைத்துள்ள நிலையில், பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் 4 வரையும், தயிர் மற்றும் மோரின் விலை லிட்டருக்கு ரூ. 4 முதல் 6 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால், பால் கொள்முதல் விலையை எந்த நிறுவனமும் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி
திருமலை நிறுவனத்தின் பால் லிட்டருக்கு ரூ. 58லிருந்து ரூ. 62 ஆகவும், முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 66லிருந்து ரூ. 70 ஆகவும் உயர்ந்துள்ளது. இதே நிறுவனத்தின் 450 கிராம் தயிர் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 36 ஆகவும், 200 மி.லி. மோர் பாக்கெட் ரூ. 4 உயர்த்தப்பட்டு ரூ. 10 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தனியார் பால் விலைகள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி ஹெரிடேஜ் நிறுவனத்தின் 457 மி.லி. பால் ரூ. 31லிருந்து ரூ. 33ஆகவும், 950 மில்லி பால் ரூ. 62லிருந்து ரூ. 64 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டோட்லா நிறுவனத்தின் முழு க்ரீம் பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி ரூ. 70 க்கும் , சாதாரண தரப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி 62 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் பால் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட பால் விலையை லிட்டருக்கு ரூ. 5, முழு க்ரீம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
