இல்லத்தரசிகள் அதிர்ச்சி... தனியார் பால் விலை உயர்வு!

 
பால்

தமிழகத்தில்  திருமலா உட்பட பல  தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் தேனீர், காபி உட்பட  பால் சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்கள் சங்கம் இந்த உயர்வுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உட்பட   பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின. இந்நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை கிளை பரப்பியுள்ள  ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனம் திருமலா பால் நிறுவனமும், ஜெர்சி பால் நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு ரூ 2   வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

பால்


இதே போல தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நிறைகொழுப்பு பால்  1 லிட்டர் பாக்கெட் 70.00லிருந்து   72.00ஆகவும், 500மிலி பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ஆகவும்,  நிலைப்படுத்தப்பட்ட பால்  1லிட்டர் பாக்கெட் 62..00லிருந்து  64.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 32.00லிருந்து  33.00ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால்  1லிட்டர் பாக்கெட் 61.00ரூபாயில் இருந்து 62.00ரூபாயாகவும், 500மிலி பால் பாக்கெட் 27.00ரூபாயில் இருந்து 28.00ரூபாயாகவும்,  


சமன்படுத்தப்பட்ட தயிர்  1கிலோ பாக்கெட் ரூ 70.00லிருந்து  72.00ஆகவும், 450கிராம் பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர்   1கிலோ பாக்கெட் 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 33.00லிருந்து  35.00ஆகவும் விற்பனை விலை மாற்றத்தை திருமலா பால் நிறுவனம் அறிவித்துள்ளது. பிற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை அடுத்த சில நாட்களில் உயர்த்த இருப்பதாக தகவல் வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   

பால்
திருமலா பால் நிறுவனத்தை தொடர்ந்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களையும் தடுத்த நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளதாக  தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பால் விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் அரசு நிர்ணயம் செய்திடவும், பால் கொள்முதல் விலையிலும், விற்பனை விலையிலும் தனியார் பால் நிறுவனங்கள் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்ற பிறகே பால் கொள்முதல், விற்பனை விலை மாற்றத்தை அமுல்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web