இல்லத்தரசிகள் ஷாக் ... செப்டம்பர் 1 முதல் பால் விலை உயர்வு!

 
பால்

 

மும்பையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பால் விலை உயர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்த விலையை லிட்டருக்கு ரூ.93-ல் இருந்து ரூ.102 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் சில்லறை நுகர்வோருக்கு ஒரு லிட்டர் பால் சுமார் ரூ.110 வரை விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பால்

இந்த விலை உயர்வு பிப்ரவரி 28, 2027 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக நுகர்வோர்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பால்

இதேபோல், வரவிருக்கும் நாட்களில் தமிழ்நாட்டிலும் பால் விலை உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் குடும்பத் தலைவிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.