பால்வளத்துறை அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி!

 
பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இப்பகுதிகள் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியின் சொந்த சட்டமன்றத் தொகுதியாக உள்ள நிலையில், அங்கேயே ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அரசியல் மற்றும் பொதுமட்ட வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்தப் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 40 பெட்டிகள் ஆவின் பால் வரவிருக்கும் நிலையில், தற்போது வெறும் 25 பெட்டிகள் மட்டுமே வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, முன்பு 50 லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளுக்கு தற்போது வெறும் 30 லிட்டர் பால் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

தட்டுப்பாடு காரணமாகக் பொதுமக்கள் அவசியத் தேவைகளுக்கே பால் கிடைக்காமல் திணறி வருவதால், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.