சூப்பர் ... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள்!

 
ரேஷன் கேழ்வரகு

தமிழகம் முழுவதும் மானிய விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்  அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை  போன்ற பொருட்கள் மலிவு விலையில் வாங்கி  ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுகிறார்கள்.

ரேஷன் கேழ்வரகு

சமீபத்தில் மத்திய அரசு ரேஷன் கடைகளுக்கு வழங்கும் கோதுமையின் அளவை உயர்த்தியதால் அரிசிக்கு பதிலாக அதனை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் சிறுதானியங்களும் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

ரேஷன் கேழ்வரகு


முதல் கட்டமாக சோதனை முயற்சியாக இரு மாவட்ட ரேஷன் கடைகளில்  வழங்கப்படும் பின்னர் விரைவில் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகளில்  சிறுதானியங்கள்  வழங்கப்படும். அதன்படி தற்போது தர்மபுரி மற்றும் நீலகிரி ஆகிய இரு மாவட்ட ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக 2 கி கேழ்வரகு வழங்கப்படுகிறது.  தமிழக மக்களின் ஆரோக்கியத்தை பெருக்குவதற்காக இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web