அடுத்த அதிர்ச்சி... மே 1 முதல் மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு!

 
மினி பேருந்து

 தமிழ்நாடு அரசு மினி பேருந்துகளுக்கான  டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும்  இந்த புதிய கட்டண நடைமுறை  மே 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினி பேருந்து

இது குறித்து தமிழக  உள்துறை செயலாளா தீரஜ் குமார்  “1988 ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் (1988ம் ஆண்டு மத்தியச் சட்டம் 59) பிரிவு 67 இன் துணைப்பிரிவு (1) ன் பிரிவு (d) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, தமிழ்நாடு கவர்னர், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிராந்தியப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் இயங்கும் மினி பேருந்துகளுக்கான கட்டணங்களை திருத்துவது குறித்து இந்த  உத்தரவை  பிறப்பித்துள்ளார்.  

மினி பேருந்து

தமிழ்நாட்டில் இயங்கும் மினி பஸ்களுக்கான கட்டணத் திருத்தம்  அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களில் கணக்கிடப்பட்ட கட்டணங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த  கட்டண திருத்தம் தற்போதுள்ள அனுமதி வைத்திருப்பவர்களுக்கும், புதிய திட்டத்தின் கீழ் வருங்கால அனுமதி வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே பொருந்தும், மேலும் இது மே 1, 2025 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web