மினி பஸ்சுக்குள் புகுந்து இளம் ஜோடி உல்லாசம்... !

 
சென்னை சென்னை

கோவை மாவட்டம் துடியலூர், வடவள்ளி, மருதமலை, கவுண்டம்பாளையம் உட்பட  பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் துடியலூர் அருகே வழக்கம் போல தங்களின் தினசரி சேவையை முடித்த மினி பஸ் ஊழியர்கள், வாகனத்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் அந்த மினி பஸ்சுக்குள் புகுந்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் உள்ளே புகுந்த இளம் ஜோடி ஒன்று அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை முதலில் கவனித்துள்ளனர். பின்னர் அந்த கேமராவை ஓரமாக திருப்பிவிட்டு பஸ்சுக்குள் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் பஸ்சில் இருந்த விலை உயர்ந்த பேட்டரி மற்றும் பயணிகள் அமரும் இருக்கை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மறுநாள் காலை வழக்கம் போல பணிக்கு வந்த டிரைவரும், கண்டக்டரும் பேருந்தின்  பேட்டரி மற்றும் இருக்கைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கேயிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது நள்ளிரவில் புகுந்த இளம் ஜோடி இந்த துணிகர சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.