20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி லாரி; 5 பேர் படுகாயம்!

 
கள்ளக்குறிச்சி

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருத்தாசலம் சாலை மேம்பாலம் அருகே மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த சுமார் 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.