51-வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கி வைத்தார்!

 
ஆதவ் அர்ஜுனா

சென்னையில் நடைபெற்ற 51-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியைப் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் இணைந்து முறைப்படி தொடங்கி வைத்தனர்.

10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியைத் துப்பாக்கியால் இலக்கை நோக்கி நேர்த்தியாகச் சுட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காவல் ஆணையர் போட்டிகளை உற்சாகமாகத் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சி உபகரணங்கள் மற்றும் வீரர்களுக்கான தேவைகள் குறித்து விளையாட்டு வீரர்களிடமும் பயிற்சியாளர்களிடமும் அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார்.

விளையாட்டைக் கற்க ஆர்வம்: போட்டித் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் நுட்பங்களைக் கண்டு வியந்ததாகவும், தானும் நேரில் இந்த விளையாட்டைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.