ஆ.ராசாவுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

 
ஆ.ராசா ஆ.ராசா

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பின்வரும் முக்கியக் கேள்விகளை முன்வைத்துள்ளார். 

கூட்டணி

விசிக தலைவர் திருமாவளவனை நோக்கி ஆ.ராசா விமர்சனம் செய்துள்ள விதம் கண்டனத்திற்குரியது. இதற்காக அவர் திருமாவளவனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களைக் குறிவைத்து மிகக் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஆ.ராசா பேசியுள்ளார்.

கூட்டணி திருமா முஸ்லிம்

ஆ.ராசாவின் இந்த சர்ச்சைக்குரிய மற்றும் கொச்சையான பேச்சுக்கு திமுக தலைவரின் கருத்து என்ன? இதற்கு திமுக தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது? கூட்டணி ஆட்சி அமைந்த சூழலில், விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் அமைச்சரவையில் இணைந்தது குறித்து ஆ.ராசா எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துகள் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.