திமுக முதல் தவெக வரை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம்!
தமிழக அரசியல் களத்தில் குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்துள்ள அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் பயணம் நெடியது.
ஆதவ் அர்ஜுனா கடந்த 2011-ம் ஆண்டு முதலே திமுகவுக்காகத் தீவிரத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 2021-க்குப் பிறகு ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்ற பெயரில் சொந்தமாகத் தேர்தல் வியூக நிறுவனத்தைத் தொடங்கிய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்காகத் தனது பணிகளை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக 2024 ஜனவரியில் விசிகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்த அவர், அதே ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுப் பலரும் அறியப்படும் முகமானார்.
விசிகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 2025-ம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான அரசில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
