அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் - அமைச்சர் அருண்ராஜ்!

 
அமைச்சர் அருண்ராஜ்

அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர் காலிப் பணியிடங்கள் ஏதும் இருக்கக் கூடாது என்பதே அரசின் முக்கிய நோக்கம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைவாக நிரப்புவதற்கான தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

தவெக அமைச்சர் அருண்ராஜ்

கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ள புதிய அரசு மருத்துவமனைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிக விரைவில் திறந்து வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் நிலவும் பற்றாக்குறைகளைப் போக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பணியிடங்களை உருவாக்குவதுடன், செவிலியர்கள் மற்றும் அவசரகால மருத்துவப் பணியாளர்களை நியமிக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.