ஞானசேகரன் வீட்டு படுக்கறையில் பிரியாணி சாப்பிட்ட அமைச்சர்.. அதிமுக கடும் விமர்சனம்!

 
 ஞானசேகரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டினார். ​​இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த திமுக அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார் என்றும் அவர் ஒரு சேடிஸ்ட் என்றும் கடுமையாக பதிலடி கொடுத்தார். இதற்கு அதிமுக ஐடி விங்க் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 


அஇஅதிமுக தொண்டர்களின் வியர்வையாலும் ரத்தத்தாலும் அரசியல் வாழ்வு பெற்ற ரகுபதி, இந்த இயக்கத்தைப் பற்றியோ, பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை. ஸ்டாலின் மாடல் அரசின் கையாலாகாத்தனத்தை உயர்நீதிமன்றமே தோலுரித்த பிறகும், உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ள வெட்கமாக இல்லையா அமைச்சர் ரகுபதி? 

ஞானசேகரன்

 2018ல் மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடி அவர்கள் ஆட்சியில் துப்பாக்கியும் கையுமாக கைது செய்யப்பட்ட இந்த ஞானசேகரனுக்கு இன்று அரசியல் அடைக்கலம் கொடுத்திருப்பது உங்கள் திமுக அரசு தானே? திமுக பவள விழாவில் பல்லிளித்து நிற்பான்... அவன் வீட்டு படுக்கையறையில் அமர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன், துணை மேயர் மகேஷ் குமார்  ஆகியோர் பிரியாணி சாப்பிடுவார்கள்... ஆனால், அவனை திமுக காரன் இல்லை என்று ரகுபதி சொல்வார் என்றால், அதை நாளை பிறக்கப்போகும் பிள்ளை கூட நம்பாது! நீங்கள் எப்படி திசைதிருப்ப நினைத்தாலும் எங்கள் கேள்வி நேரானது- #யார்_அந்த_SIR ?.. என்று காட்டமாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web