உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் - அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவிப்பு!

 
ஜெகதீஸ்வரி

மாற்றுத்திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

குறைந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது சுயசார்பு பயணத்திற்காக பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென பிரத்யேகமாகச் சிறப்புப் பள்ளிகளும், ஆரம்ப நிலை பயிற்சி மையங்களும் தொடங்கப்படும்.

ஜெகதீஸ்வரி

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டையைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகப் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தற்போதைய தொகையை விட இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.