மதுராந்தகம் தென்திருப்பதி வையாவூர் பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்மோகன் சாமி தரிசனம்!

 
மதுராந்தகம் திருமலை வையாவூர் பெருமாள் கோவில் அமைச்சர் ராஜ்மோகன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள புகழ்பெற்ற திருமலை வையாவூர் பெருமாள் கோவிலில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நேரில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

'தென் திருப்பதி' அல்லது 'குட்டி திருப்பதி' என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்குத் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு வருவது வழக்கம்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட இப்பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் ராஜ்மோகன், எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் இன்றி சாதாரண பக்தர்களைப் போலவே நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்தார்.