டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடங்கள் நடத்த அனுமதி - அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான புதிய டெண்டர் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் பார்களில் முறையான உணவுக்கூடங்கள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பார்களில் தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும், இதற்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்திலுமே இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். பார்களில் பிரத்யேக உணவுக் கூடங்கள் உருவாக்கப்படும்போது, அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்துத் தொடர்புடைய துறை அதிகாரிகள் மூலம் முறையாக ஆய்வு செய்ய வழிவகை ஏற்படும்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய டெண்டர் கோரும் பணிகள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
