கல்லணையில் டெல்டா பாசனத்திற்கு நீரைத் திறந்து வைத்தார் அமைச்சர் வினோத்!

 
கல்லணை வினோத்

டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத் தேவைக்காகத் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து இன்று முறைப்படி தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு கல்லணையிலிருந்து நீரைத் திறந்து வைத்தனர்.

கல்லணை

இந்தத் தண்ணீர் திறப்பின் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு டெல்டா மாவட்டப் பகுதிகளில் நடைபெறவுள்ள குறுவை மற்றும் இதர சாகுபடிப் பணிகளுக்குத் தேவையான நீர் தடையின்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல எதிர்பார்ப்பிற்குப் பிறகு பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.