கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் - அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

 
உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம்!

கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என உயர்கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாக உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகளில் மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் உயர்கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. மாணவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள இந்தச் சுற்றறிக்கை குறித்துச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. மாரிமுத்து கேள்வி எழுப்பினார்.

உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட அந்தச் சுற்றறிக்கையில், சில அரசியல் கட்சிகளின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றிருந்தன. இதைக் கண்டறிந்தவுடன் அந்தச் சுற்றறிக்கை உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

மாணவர்களின் உரிமைகளையோ அல்லது கருத்துச் சுதந்திரத்தையோ கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்குக் சிறிதும் இல்லை என்றும் அமைச்சர் சட்டமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.