சூப்பர்.. மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு.. தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்த உத்தரவு..!

 
 காவலர் தேர்வு

CRPF, BSF, CJASF போன்ற மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. இதனால், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநில மொழிகளில் தேர்வு எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுகளும், கட்சித் தலைவர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

TNUSRB-இரண்டாம் நிலை காவலர் தேர்வு-2022 பற்றிய அறிவிப்பு தேதி வெளியீடு -  Tamil Madal

இந்நிலையில், இனிமேல் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு நேற்று தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதில் 48  லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இந்தத் தேர்வு நாட்டின் 128 நகரங்களில் நடத்தப்படுகிறது. தமிழ், அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கான்டைம், தெலுங்கு, ஒடிசி, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, கொங்கனி ஆகிய பிராந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web