ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது விபரீதம்.. அதிவேகமாக வந்த கார் மோதி 5 பெண்கள் பரிதாப பலி!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்-பழைய மகாபலிபுரம் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் இன்று காலை சாலையைக் கடந்துள்ளனர். இவர்கள் அங்குள்ள பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள். அப்போது, அதிவேகமாக கார் ஒன்று வந்தது. பெண்கள் சாலையைக் கடப்பதைப் பார்த்த இந்த கார் ஓட்டுனரால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால், வாகனம் பெண்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெண்கள் சாலையில் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். விபத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விபத்தில் உயிரிழந்த பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் பலியானவர்கள் விஜயா, யசோதா, லோகாம்பாள், கவுரி, ஆனந்தம்மாள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!