ஈரான் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் - மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

 
ஈரான் கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் கார்க் தீவுப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் நேற்று அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஈரான் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதாகவும், அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் நிலவியது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சிறிது அமைதி திரும்பிய நிலையில், கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்துள்ளது.

இந்தத் தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதுடன், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது.