நாளை வங்கக்கடலில் ”மிதிலி” புயல் உருவாகிறது... 5 நாட்களுக்கு அலெர்ட்... !!

 
அசானி புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு புறம், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றொரு புறம் என மழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,  வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் பெய்த மழை அளவு நிலவரம்- பேரிடர் மேலாண்மை தகவல்..!!

தற்போது  விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டது. இந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.  மேலும் வலுவாகி நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை  வங்கதேசத்தின் மோங்லா - கேபுபரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

 

புயல்
 இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாக இருப்பதாக வுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவின் பரிந்துரையின் படி இந்த புயலுக்கு 'மிதிலி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த மே மாதம் மேக்கா புயலும், அக்டோபர் மாதம் ஹாமூன் புயலும் உருவான நிலையில், நடப்பாண்டில் உருவாகும் மூன்றாவது புயலாக இது இருக்கும்.   தமிழகத்தை பொறுத்தவரை, அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web